24 67494d5d1349c
இலங்கைசெய்திகள்

அதி சொகுசு வாகனங்களை ஏலத்தில் விட அரசாங்கம் தீர்மானம்!

Share

அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று சொகுசு வாகனங்கள் ஏலம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.

இந்த சொகுசு வாகனங்களைப் பராமரிக்க அரசாங்கம் பாரிய செலவைச் சுமக்க வேண்டியுள்ளதுடன், இவற்றில் பெரும்பாலானவை முன்னாள் அமைச்சர்களே பயன்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவதையும் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.

அத்துடன், 5 வருடங்களின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் ஆராயக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...