பிரபல பாதாள உலகக்கும்பல் புள்ளியான கெஹெல்பெத்தர பத்மேவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தற்போதைக்கு கெஹெல்பெத்தர பத்மேவுக்கு உரித்தான சுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் சட்டவிரோத சொத்து சேகரிப்பு விசாரணைப்பிரிவினரால் இனம் காணப்பட்டுள்ளது.
பணச்சலவை சட்டத்தின் கீழ் குறித்த சொத்துக்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து அவற்றை அரசுடைமையாக்க சட்டவிரோத சொத்து சேகரிப்பு விசாரணைப்பிரிவின் பொலிசார் தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அதே போன்று இன்னும் பல முக்கிய பாதாள உலகப்புள்ளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது தொடர்பாகவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

