கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் தொடர்பில் சர்ச்சை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் பதவியில் இருந்து தாம் விலகியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.
அரசியலில் ஈடுபடுவதற்காக சுகீஸ்வர பண்டார பதவி விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், பிரான்ஸுக்கு விஜயம் செய்துள்ள அவர் கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் பதவியிலிருந்து விலகுவதினை தான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
தான் பதவி விலகியதாக வெளியாகியுள்ள செய்திகளில் எந்த உண்மையும் இல்லை எனவும், தம்மை கொச்சைப்படுத்த முயற்சிக்கும் ஒரு குழுவினரால் இவ்வாறு பொய்யான செய்திகள் பரப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.