tamilnaadi 88 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வதேசத்தின் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட கோட்டபய – ராஜபக்ச குடும்ப உறுப்பினர் தகவல்

Share

சர்வதேசத்தின் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட கோட்டபய – ராஜபக்ச குடும்ப உறுப்பினர் தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் வீழ்த்தப்பட்டதற்கு தேசிய மற்றும் சர்வதேசத்தின் சூழ்ச்சிகளிலே காரணமென பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரகலயவின் பின்னணி என்ன என்பதை மக்கள் நன்கு விளங்கிக் கொண்டுள்ளார்கள் என்றும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாட்டு மக்களின் அமோக ஆதரவுடன் 2019 ஆம் ஆண்டு கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டது.

சர்வதேசத்தின் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட கோட்டபய – ராஜபக்ச குடும்ப உறுப்பினர் வெளியிட்ட தகவல் | Gotabaya Rajapaksa Political Book And Namal

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று பூகோள மட்டத்தில் தாக்கம் செலுத்திய நிலையில் கொரோனா பெருந்தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பற்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ முன்னுரிமை வழங்கினார்.

பூகோள பொருளாதார நெருக்கடி இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல, வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதை தொடர்ந்து எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட் கொள்வனவில் பாதிப்பு ஏற்பட்டது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருந்த மக்களின் விரக்தி நிலையை ஒரு தரப்பினர் தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொண்டார்கள்.

தேசிய மற்றும் சர்வதேசத்தின் சூழ்ச்சிகளினால் தான் கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் வீழ்த்தப்பட்டதுடன் அரகலயவின் பின்னணி என்ன என்பதை மக்கள் நன்கு விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

அதேவேளை, எதிர்வரும் தேசிய தேர்தல்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை தலைமைத்துவமாக கொண்டு பலமான அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...