18 2 scaled
இலங்கைசெய்திகள்

கமல் குணரத்னவை துரோகியாக்கிய கோட்டாபயவின் புத்தகம்

Share

கமல் குணரத்னவை துரோகியாக்கிய கோட்டாபயவின் புத்தகம்

அமைதியான மக்கள் போராட்டத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள சதி என்ற ஆவண புத்தகத்தில் மற்றுமொரு சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன துரோகி என மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சதி என்ற பெயரில் வெளியாகியுள்ள அந்த புத்தகத்தில் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி அனைத்து பாதுகாப்புப் படைத் தலைவர்களும் துரோகிகள் என்பதன் அடைப்படையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சாலே துரோகி பெயரில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவின் கீழ் அதே பதவியில் அவர் இன்றும் பணியாற்றி வருகிறார்.

“பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் இத்தகைய சூழ்நிலைகளுக்கு சரியான பதிலடி கொடுப்பதற்கான திட்டத்தை தயாரித்திருக்க வேண்டும். ஆனால் அத்தகைய சூழ்நிலையை கட்டுப்படுத்த எந்த முறையும் பயன்படுத்தப்படவில்லை” என அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் கூட இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ள போதிலும் பதில் திட்டத்தை தயாரிப்பதில் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலேவின் பங்கு இவ்வாறு தவிர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...