ஜனாதிபதியின் வீட்டுக்கு தீ : ஆசிரியர் கைது

tamilni 93

ஜனாதிபதியின் வீட்டுக்கு தீ : ஆசிரியர் கைது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ மூட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது ரணில் விக்ரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்கேத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

Exit mobile version