இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு
இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசேட தொடருந்து சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை விசேடதொடருந்து சேவை ஆரம்பமாகவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
“ஏப்ரல் 5 ஆம் திகதி, எல்ல, ஒன்பது ஆர்ச் மற்றும் சுற்றுலாத்தலங்கள் வழியாக இரண்டு புதியதொடருந்துகள் சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில், விசேட பெட்டியுடன் சேவையில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு தினமும் காலை 6.30 மணிக்கு ஒரு தொடருந்து மற்றும் செவ்வாய், வியாழன் வெள்ளி, ஞாயிறு, ஆகிய தினங்களில் மற்றொரு தொடருந்து இயக்கப்படும்.” என்றார்.