உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று கணிசமாக அதிகரித்த நிலையில் கொழும்பு – செட்டியார் தெரு நிலவரப்படி இன்று தங்கத்தின் விலையானது 4 இலட்சத்தை அடைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,233 அமெரிக்க டொலரை அடைந்துள்ளமையினால் இவ்வாறு தங்கம் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று கணிசமாக அதிகரித்து வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று (16) 4,233 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
கடந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,640 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இதற்கமைய, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்று இலங்கையில் தங்கத்தின் விலை ரூ. 60,000 அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று காலை (16), கொழும்பில் ஹெட்டி தெரு தங்க சந்தையில் “22 கரட்” தங்கத்தின் ஒரு பவுண் ரூ. 10,000 அதிகரித்து, புதிய விலை ரூ. 360,800 இற்க விற்பனை செய்யப்படுகின்றது.
கடந்த வியாழக்கிழமை, ரூ. 305,300 ஆக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த வியாழக்கிழமை ரூ. 330,000 ஆக இருந்த “24 கரட்” தங்கத்தின் ஒரு பவுண் விலை இப்போது ரூ. 390,000 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு தங்க சந்தையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.