தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றம்

24 6629fb130faee

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றம்

கொழும்பு செட்டியார்தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 173,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக இலங்கையில் தங்கத்தின் விலை பாரிய அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.

குறிப்பாக 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது இரண்டு இலட்சம் ரூபாவை தொட்டிருந்தது.

இந்த நிலையில் கொழும்பு செட்டியார்தெரு நிலவரப்படி தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தெரியவருகிறது.

அதன்படி, இன்று (25.04.2024) காலை 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 173,000 ரூபாவாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 188000 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version