தங்க ஆபரண கொள்வனவு தொடர்பில் எச்சரிக்கை

24 665802614f59a

தங்க ஆபரண கொள்வனவு தொடர்பில் எச்சரிக்கை

நேரடி இறக்குமதியின்றி மூன்றாம் தரப்பினரிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் தங்க ஆபரணங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சட்டவிரோதமாக தங்கத்தை இறக்குமதி செய்த ஐந்து நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேரடி இறக்குமதியின்றி, மூன்றாம் தரப்பினரிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் தங்க ஆபரணங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்.

வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதிக்குள், இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இறக்குமதி செய்த ஐந்து நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அந்த நிறுவனங்களுக்கு 1243 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version