உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது.
இத்தகவலை வெளிநாட்டு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.
அதற்கமைய, உலகின் பொருளாதார மற்றும் அரசியல் நிலை குறித்த கவலைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை ஆராய்ந்து வரும் நிலையில், தங்கத்தின் விலை முதல் முறையாக இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி, நியூயோர்க்கில் தங்க எதிர்காலங்கள் 4,003 அமெரிக்க டொலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன.
நியூயோர்க் ஸ்போட் தங்கத்தின் தற்போதைய விலைப்பட்டியல், அவுன்ஸ் ஒன்றுக்கு 3,960.60 டொலர் ஆக உயர்ந்துள்ளது.
இது விலைமதிப்பற்ற உலோகங்களை அளவிடுவதற்கான தரநிலை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.