தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்!
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்!

Share

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்!

கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (29.06.2023) ஆபரண தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளது.

செட்டியார்தெரு தகவல்களின் படி தங்கத்தின் விலையில் கடந்த சில கிழமைகளாக தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகி வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலையானது 149,000 ரூபா என்ற நிலையிலேயே காணப்பட்டது.

இவ்வாறான சூழலில் இன்று மீண்டும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 148,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 160,000 ரூபாவாக காணப்படுகிறது.

ஏற்கனவே தங்க விலையானது 146,000 ரூபா வரையில் குறைந்த போது இன்னும் விலை குறைவை எதிர்நோக்கி காத்திருந்தவர்களுக்கு திடீர் விலை அதிகரிப்பானது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறான சூழலில் மீண்டும் தங்க விலையில் வீழ்ச்சி பதிவாகி வரும் நிலைமையானது நகை வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சியான தகவலான அமையும் எனவும் பொருளாதார அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...