24 667b6a3d41a43 26
இலங்கைசெய்திகள்

யாழில் குப்பைக்குள் மாயமான பெருந்தொகை தங்கம்

Share

யாழில் குப்பைக்குள் மாயமான பெருந்தொகை தங்கம்

யாழ்ப்பாணத்தில் தவறுதலாக, தமது பெருமளவு தங்கம் குப்பையில் போடப்பட்டதாக,கூறப்படும் சம்பவம் தொடர்பாக, குடும்பம் ஒன்றினால், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கத்தானை பகுதியிலேயே, தமது 42 பவுண் தங்க நகைகள் தவறுதலாக குப்பையில், போடப்பட்டநிலையில், அவற்றை குப்பை அகற்றும் வாகனம் எடுத்துச்சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதனை பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலேயே, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாக, முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த தரப்பினரை பொலிஸார் அழைத்து விசாரணை செய்த போதும், அது தொடர்பில் தகவல் எவையும் வெளியாவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னரும் இது போன்ற சம்பவம் ஒன்றில், நகரசபையினர் குப்பைக்குள் இருந்து 18 பவுண் தங்க நகைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
19 3
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையை உலுக்கிய இரட்டை படுகொலை – பின்னணி தொடர்பில் வெளியான பகீர் தகவல்

தென்னிலங்கையில் இளம் தம்பதியை கொடூரமாக கொலை செய்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹுங்கம,...

18 4
இலங்கைசெய்திகள்

பெண் மருத்துவரை துர்நடத்தைக்கு உட்படுத்திய நபர் விடுவிக்கப்பட்டு மீண்டும் கைது

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் ரீதியாக துர்நடத்தைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக...

17 4
இலங்கைசெய்திகள்

இலங்கையின் பேரழகு தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவி பெருமிதம்

இலங்கையின் கலாசாரத்தை பார்த்து நெகிழ்ச்சியடைவதாக அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட மகளீர் கிரிக்கெட் அணியின் தலைவி சமாரா...

16 4
இலங்கைசெய்திகள்

20 தமிழ் – சிங்கள தம்பதியினருக்கு வவுனியாவில் திருமணம்

வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிசார்ட் பதியுதீனால் 20...