கர்ப்பிணி தாயிடம் தங்க நகை கொள்ளை

rtjy 225

கர்ப்பிணி தாயிடம் தங்க நகை கொள்ளை

திருகோணமலையில் கர்ப்பிணி தாய் ஒருவரை தள்ளிவிட்டு தங்க ஆபரணத்தை அபகரித்து சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அன்புவழிபுரம் பகுதியில் நேற்று (22.09.2023) இடம்பெற்றுள்ளது.

குறித்த கர்ப்பிணி தாய் உணவு இடைவேளையில் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வருகை தந்தபோது அன்புவழிபுரம் பிரதான வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரது கழுத்தில் இருந்த தங்க நகைகளை அபகரித்துச் சென்றுள்ளனர்.

இதன்போது அவரது கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும், சந்தேக நபர்களை தேடி வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version