4 1
இலங்கைசெய்திகள்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் எச்சரிக்கை

Share

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் எச்சரிக்கை

அரசாங்கம் மருத்துவர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் சேவையிலான சவால்களை தீர்க்கத் தவறினால் தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நேற்று எச்சரித்துள்ளது.

அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் சந்திப்பு நடத்தியதாகவும், ஆனால் எந்த உடன்படிக்கையும் எட்டப்படவில்லை எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சாமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி குறித்த பிரச்சினைகளை விரிவாக ஆய்வு செய்ய மேலும் கால அவகாசம் வேண்டுமென என குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கைகள் எடுப்பது என்பது இறுதி கட்ட முயற்சியாக மட்டுமே இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வாரம் மீண்டும் ஜனாதிபதியையும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவையும் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மருத்துவ துறைசார் அதிகாரிகள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு குடிப்பெயர்வது மற்றும் நிபுணர்கள் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மருத்துவர்களின் கொடுப்பனைகள் மற்றும் விடுப்பு முறையில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், “மாலை 4 மணிக்குப் பிறகு பணியாற்ற முடியாத சூழ்நிலை உருவாகினால் இலங்கையில் சுகாதார சேவையை தொடர்ந்து வழங்க முடியாது” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சம்பள உயர்வு வழங்கப்பட்டாலும் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டதால் சம்பள அதிகரிப்பின் பலன்கள் கிடைக்கப் பெறாது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...