அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

tamilnig 15

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (24.01.2024) காலை 8 மணி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 35,000 கொடுப்பனவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன கையொப்பமிட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதையடுத்தே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஜனவரி மாதம் முதல் Disturbance Availability and Transport (DAT) கொடுப்பனவை வழங்குவதற்கான ஏற்பாடுகளை திறைசேரி வழங்கவில்லை என குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version