காதலனை கடத்திய காதலி! அம்பலமான தகவல்கள்
இலங்கைசெய்திகள்

காதலனை கடத்திய காதலி! அம்பலமான தகவல்கள்

Share

காதலனை கடத்திய காதலி! அம்பலமான தகவல்கள்

களுத்துறையில் காதலி ஒருவர் தன் காதலனை கடத்தி சென்ற சம்பவம் இடம் பெற்றுள்ளது.

களுத்துறை, பின்வத்த பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அக் காதலியை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காதல் உறவில் இருந்து பின்வாங்கிய இளைஞனை கடத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படையினருக்கு தொடர்புடைய யுவதி உட்பட குழுவினரை தேடி நேற்று இரவு விசாரணைகளை ஆரம்பித்ததாக பின்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்வத்த பிரதேசத்தில் வசிக்கும் கடத்தப்பட்ட இளைஞனும் அவரது தாயும் நேற்று பிற்பகல் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்ட இளைஞனும் கடத்திய யுவதியும் காதலித்து வந்ததாகவும், குறித்த இளைஞன் யுவதியை திருமணம் செய்து கொள்ள விரும்பாத காரணத்தினால் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்வத்த பகுதியில் முச்சக்கரவண்டியில் பலருடன் வந்த யுவதி இளைஞனை கடத்திச் சென்று வெறிச்சோடிய வீடொன்றில் மறைத்து வைத்து மீண்டும் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தலை மேற்கொண்டதாக கூறப்படும் யுவதி மற்றும் அவருடன் வந்த நபர்களை கண்டறிய விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
Vijayakanth Viyaskanth SRH IPL 2024 1
செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடர்: இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைவு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடருக்கான இலங்கை தேசிய ஆடவர் அணியில், இளம் சுழற்பந்து...

67e090cde912a.image
உலகம்செய்திகள்

கனடாவின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடி: இஸ்ரேல் ஆதரவுக் குழுவின் தஃப்சிக் அமைப்பு தடை கோரி நீதிமன்றம் நாடியது!

கனடாவின் பல நகரங்களின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து...