rtjy 177 scaled
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யுவதி கைது

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யுவதி கைது

கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்படாத முகவரகத்தின் ஊடாக கட்டாரில் வீட்டுப் பணிப் பெண்ணாக சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சித்த யுவதியே கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டாரில் 21 வயதுக்கு மேற்பட்ட இளம் பெண்களை மட்டுமே வீட்டு சேவைக்கு பரிந்துரைக்க முடியும். ஆனால் மோசடியான முறையில் கட்டாருக்கு செல்ல முயற்சித்த யுவதி மொரட்டுவையில் வசிக்கும் 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

நேற்று காலை 10.30 மணியளவில் டோஹா நோக்கிப் புறப்படும் Qatar Airways விமானமான QR-665 இல் ஏறுவதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இந்த விமானத்தில் பயணிப்பதற்கு தேவையான அனுமதியை முடித்துவிட்டு ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு குடிவரவு கவுண்டருக்கு வந்துள்ளார்.

கத்தாரில் பணிபுரிய விசா பெற்றிருந்தாலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் அந்தப் பணிக்கான பதிவு, அந்நாட்டு வேலைவாய்ப்பு முகவருடன் செய்துகொள்ளப்பட்ட வேலைவாய்ப்பு ஒப்பந்தம், பயிற்சி சான்றிதழ் ஆகியவை இல்லாததால் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், இந்த யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துச் வந்ததாகவும் யுவதிக்கு 21,500 ரூபா வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த யுவதி வேலைக்காக புறப்படுவதற்காக விமான நிலையத்தின் புறப்படும் முனையத்திற்குள் பிரவேசித்த போது, ​​இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளிடம் சிக்கவில்லை.

கைது செய்யப்பட்ட யுவதி மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...