ஜேர்மனிக்கு பயணமாகவுள்ளார் ஜனாதிபதி அநுர

25 6846882e5e09b

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) நாளை(10) செவ்வாய்க்கிழமை இரவு ஜேர்மனிக்குப் பயணமாகின்றார்.

ஜேர்மனியால் விடுக்கப்பட்ட அதிகாரபூர்வ அழைப்பையேற்று அங்கு செல்லும் ஜனாதிபதி அநுர, ஜேர்மன் ஜனாதிபதி, வர்த்தக அமைச்சர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அங்கு சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இலங்கை மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளுக்கிடையில் இரு தரப்பு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.

ஜேர்மன் முதலீடுகளை இலங்கைக்குப் பெறுவது சம்பந்தமாகவும், ஆடை ஏற்றுமதி பற்றியும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட குழுவினரும் ஜேர்மன் செல்கின்றனர்.

இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு அமெரிக்காவில் வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பா சந்தையை இலங்கை இலக்கு வைத்துள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version