2023 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்: பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர்களின் விபரங்கள்

24 6659eaa03cea4

2023 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்: பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர்களின் விபரங்கள்

2023ஆம் கல்வி ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 64.33 சதவீதமான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (31) வெளியாகியது.

இதன்படி, பரீட்சைக்குத் தோற்றிய 269,613 பரீட்சார்த்திகளில் 173,444 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.

இந்தநிலையில், பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 190 பேரின் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

146 பாடசாலை பரீட்சார்த்திகளினதும், 44 தனியார் பரீட்சார்த்திகளினதும் பெறுபேறுகள் இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version