24 66455b79d09a6
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல்

Share

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி, தனது அமைச்சின் கீழ் இவ்வருடத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.

எனவே ஜூலை மாதத்திற்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த இடமளிக்கப்படாது.

அரசாங்கம் போதிய நிதி ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளது. ஆனால் சில துறைகள் இன்னும் வேலை செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F27jvfekTpzayau9faoUh
செய்திகள்இலங்கை

இலங்கை யாத்ரீகர்களுக்காக UPI One World டிஜிட்டல் சேவை அறிமுகம்: இந்திய மொபைல் எண்ணின்றிப் பணம் செலுத்த வசதி!

இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை பௌத்த யாத்ரீகர்களுக்காக UPI One World டிஜிட்டல் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான...

images 2 7
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு: டென்மார்க்குடன் இலங்கை இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து – 39 மில்லியன் டாலர் கடன் நிவாரணம்!

நடந்து வரும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையின் ஒரு பகுதியாக, இலங்கை அரசு டென்மார்க் அரசுடன்...

images 2 7
செய்திகள்இலங்கை

மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள்: இந்தியத் துணைத் தூதர் சந்தித்து வாழ்த்து!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு, இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதர் திரு. ஹர்விந்தர்...

MediaFile 13
செய்திகள்இலங்கை

மொரட்டுவ பாடசாலை மாணவர் துஷ்பிரயோகம்: ஆசிரியர் விளக்கமறியலில்; சம்பவத்தை மறைத்த அதிபர் பிணையில் விடுதலை!

மொரட்டுவப் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையைச் சேர்ந்த 14 வயது மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம்...