கைப்பிடிகளுடன் கூடிய பொலித்தீன் பைகளுக்கு (Shopping Bags) வர்த்தக நிலையங்கள் கட்டணம் அறவிட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் இன்று (நவம்பர் 1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதற்கமைய, இனிவரும் காலங்களில் பொருட்களை விற்பனை செய்யும் போது, ஷொப்பிங் பைகள் போன்ற கைப்பிடி கொண்ட அனைத்துப் பொலித்தீன் பைகளுக்கும் வர்த்தக நிலையங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாக அறவிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை பொலித்தீன் பாவனையைக் குறைப்பதன் மூலம் சூழலைப் பாதுகாக்கும் நோக்குடன் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ளது.

