8 10
இலங்கைசெய்திகள்

பன்றி காய்ச்சல் பரவலை தடுக்கும் விசேட வர்த்தமானி வெளியீடு

Share

பன்றி காய்ச்சல் பரவலை தடுக்கும் விசேட வர்த்தமானி வெளியீடு இலங்கையின் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் கடந்த சில மாதங்களாக கண்டறியப்பட்டுள்ள ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் (African Swine Fever – ASF) நோய், மேலும் பரவுவதனை தடுக்கும் நோக்கில், விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையின் அனைத்து மாவட்டங்களும் “ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் அபாயப் பகுதிகள்” எனவும், பன்றிகள் “நோய் அபாய விலங்குகள்” எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1992ம் ஆண்டு 59ம் இலக்க விலங்கு நோய்கள் சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி கடந்த 3 ஆம் திகதி முதல் அமலுக்கு வருவதாகவும் மூன்று மாதங்களுக்கு வரை செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் அபாயப் பகுதிகளில் இருந்து நோயை பரப்பக்கூடிய சில நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளன என்றும் வர்த்தமானியில் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...