தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான வர்த்தமானி எங்கே..!
2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய குழுக்கள் எவையும் இதுவரை தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு இணைப்பதற்கான வர்த்தமானி வெளியிடப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பெருமளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், ஆனால் கல்வி அமைச்சு அந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நாட்டின் கல்வி தற்போது பாரிய ஆபத்தில் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.