வீதிகளில் நபர்களை அச்சுறுத்தும் மோட்டார் சைக்கிள் கும்பல்

24 66318bea469cc

வீதிகளில் நபர்களை அச்சுறுத்தும் மோட்டார் சைக்கிள் கும்பல்

மேல் மாகாணத்தில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் மற்றும் ஆண்களை அச்சுறுத்தும் மோட்டார் சைக்கிள் கும்பலின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவ பொலிஸார் நேற்று (30) சந்தேகநபரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த கும்பல் மேல் மாகாணத்தில் வீதிகளில் பயணிப்பவர்களை மோட்டார் சைக்கிளில் வந்து அச்சுறுத்தி பணம், நகை கொள்ளையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கும்பலின் பிரதான சந்தேகநபரான “மன்ன சமந்த” என்ற குற்றவாளி பிரதேசத்தை விட்டுத் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version