யாழில் வன்முறை: மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் அட்டூழியம்

24 665cfbf864d3a md

யாழில் வன்முறை: மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் அட்டூழியம்

யாழ்ப்பாணம் (Jaffna) – அச்சுவேலி கைத்தொழில் பேட்டை பகுதியில் உள்ள பண்ணையொன்றில் பெருமளவானவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (02) ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இருபது வரையான மோட்டார் சைக்கிள்களில் கும்பலாக வந்தவர்கள் பண்ணையில் உள்ள வீட்டில் பெருமளவு சேதங்களை ஏற்படுத்தி தீவைத்து சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று மதியம் சம்பவ இடமான பண்ணைக்கு வந்த சிலர் அங்கு நின்ற ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

முன் பகையே தாக்குதலுக்கு காரணம் என சந்தேகிக்கும் அச்சுவேலி காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version