பெண்கணை அச்சுறுத்தி கொள்ளையடிக்கும் கும்பல்

tamilni 418

பெண்கணை அச்சுறுத்தி கொள்ளையடிக்கும் கும்பல்

புத்தளத்தில் பெண்கணை அச்சுறுத்தி கொள்ளையடிக்கும் கும்பலை தேடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வனாத்தவில்லு பிரதேசத்தில் பெண் ஒருவரை துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையிட்ட கும்பலை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கடந்த 30ஆம் திகதி வனாத்தவில்லுவ – 06 ஆம் மைல்கல் பிரதேசத்தில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வனாத்தவில்லுவ – ஸ்மைல்புரம், மாரசிங்க பெடிகே பகுதியைச் சேர்ந்த சுஜீவ தீபானி செய்த முறைப்பாட்டிற்கமைய, பொலிஸார் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தான் மோட்டார் சைக்கிளில் பயணித்ததாகவும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தனது மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்தி, கைத்துப்பாக்கி போன்ற ஆயுதங்களைக் காட்டி மிரட்டி தங்க சங்கிலி மற்றும் பதக்கத்தை அபகரித்துச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொள்ளையர்கள் யாரென அடையாளம் காணப்படவில்லை எனவும் இவர்களுடன் தொடர்புடைய மேலும் பலர் இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version