12 33
இலங்கைசெய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை! பழிவாங்கத் துடிக்கும் இரு தரப்பினர் – தீவிரமடையும் நிலை

Share

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை! பழிவாங்கத் துடிக்கும் இரு தரப்பினர் – தீவிரமடையும் நிலை

பாதாள உலகக் குழு தலைவர்களான கணேமுல்ல சஞ்சவீவவின் தரப்பினருக்கும், துபாயில் மறைந்திருப்பதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மேவின் தரப்பினருக்கும் இடையில் தற்போது மோதல் நிலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் குற்றச் சம்பவங்கள், மோதல்கள் குறித்து பொலிஸார் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

அண்மையில் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் வைத்து கணேமுல்ல சஞ்சீவ சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் இந்த மோதல் நிலை தீவிரமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவவின் பிரிவினருக்கும், தற்போது துபாயில் மறைந்திருப்பதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மேவின் பிரிவினருக்கும் இடையே இந்த மோதல்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதாள உலகக் குழு தலைவரான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் பின்னணியில் கெஹல்பத்தர பத்மே இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பத்மேவின் தந்தையின் கொலைக்கு கணேமுல்ல சஞ்சீவதான் காரணம் என்றும் இதற்காக பழிவாங்கும் நோக்கில் சஞ்சீவவை கொலை செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக தற்போது இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் நிலை தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில், கெஹல்பத்தர பத்மே என்ற பெயரைப் பயன்படுத்தி பணக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு வந்த லஹிரு ரந்தீர் காஞ்சன மீது நேற்றையதினம் மினுவாங்கொடை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த நபர் துபாயில் இருக்கும் கெஹல்பத்தர பத்மேவின் நீண்ட கால நண்பர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவர் தற்போது கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கணேமுல்ல சஞ்சீவ தரப்பைச் சேர்ந்தவர்களே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், இரு தரப்பினருக்கும் இடையிலான பழிவாங்கல் நடவடிக்கைகளை தீவிரமடைந்துள்ள நிலையில், பொலிஸார் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...

05 15
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற 08 பேர் கைது: மவுசாக்கலை சோதனைச் சாவடியில் சிக்கினர்!

புனித சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 8 பேர்...