படுகொலை செய்யப்பட்ட சஞ்சீவவின் சடலத்தை அடையாளம் காண வந்துள்ள உறவினர்கள்!

22 5

படுகொலை செய்யப்பட்ட சஞ்சீவவின் சடலத்தை அடையாளம் காண வந்துள்ள உறவினர்கள்!

கணேமுல்ல சஞ்சீவவின் உடலை அடையாளம் காண்பதற்கு அவரின் உறவினர்கள் வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று (19) புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ என்னும் சஞ்சீவ குமார சமரரத்னவின் உறவினர்கள் யாரும் அவரது உடலைப் பெற முன்வரவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது அவரை அடையாளம் காண நபர்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று (19) புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ என்னும் சஞ்சீவ குமார சமரரத்னவின் உறவினர்கள் யாரும் அவரது உடலைப் பெற முன்வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரது உடல் கொழும்பு பொலிஸ் பிணவறையில் குடும்ப உறுப்பினர்களின் சேகரிப்புக்காக வைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், அவரின் உடலை பெற்றுக் கொள்வதற்கு உறவினர்கள் என எவரும் இதுவரை முன்வரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவ என்று அழைக்கப்படும் பாதாள உலக கும்பல் தலைவர் நேற்று (19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சஞ்சீவ கைது செய்யப்பட்டு சிறையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சட்ட நடவடிக்கைகளுக்காக சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதன்போது, பொலிஸாரின் கூற்றுப்படி, அவர் 19 கொலை வழக்குகளில் சந்தேக நபராக இருந்துள்ளார். நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட ரிவால்வர் ரக துப்பாக்கியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர், மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர் உட்பட இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில், இன்று (20) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில்களில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Exit mobile version