கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரைப் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் அஸங்க எஸ். போதரகம இன்று (17) உத்தரவிட்டார்.
இதன்படி, சந்தேகநபரை தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சிம் கார்டுகளை (SIM Cards) வழங்கியதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

