காலி முகத்திடலில் மோசமான செயல்!
இலங்கைசெய்திகள்

காலி முகத்திடலில் மோசமான செயல்!

Share

காலி முகத்திடலில் மோசமான செயல்!

காலிமுகத்திடலில் மக்கள் உண்பதற்கு பொருத்தமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை துறைமுக முகாமைத்துவ மற்றும் ஆலோசனை சேவைகள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுராஜ் கதுருசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“மலசலகூடம் போன்ற அசுத்தமான இடங்களில் தயாரிக்கப்படும் பொருத்தமற்ற உணவுகள் கொழும்பு காலி முகத்திடலுக்கு கொண்டு வந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி காலி முகத்திடல் சதுக்கத்தில் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மதச் செயற்பாடுகள் தவிர, அதன் அழகை பாதுகாக்கும் நோக்கில் இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது பிற நடவடிக்கைகளுக்கு அந்த பகுதியை வழங்குவதில்லை என்று அரசாங்கம் முடிவு செய்திருந்தது.மேலும் காலி முகத்திடல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு அழகிய பகுதி.

இதனால், தினமும் ஏராளமானோர் இங்கு வந்து ஓய்வு நேரத்தை கழிக்கவும், நடைபயிற்சி செய்யவும் வருகின்றனர்.

இங்கு வருபவர்களுக்கு உணவு விற்கும் வகையில், கடற்கரைக்கு அருகிலேயே சிறிய கடைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் காலிமுகத்திடலுக்கு வரும் மக்களுக்கு தரமான உணவை வழங்கும் நோக்கில் இந்த வர்த்தகர்களை ஒழுங்குபடுத்த இலங்கை துறைமுக அதிகாரசபை திட்டமிட்டுள்ளது.”என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 58
உலகம்செய்திகள்

ஈரான் மூத்த தலைவர் கமல்கராஸி இல்லம் மீது தாக்குதல்: அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரான் இராணுவத்திற்கும் இடையிலான போர் இன்று (ஏப்ரல் 03,...

Untitled 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கண்டி விபத்து சோகம்: சிகிச்சை பலனின்றி மற்றைய மாணவனும் உயிரிழப்பு!

கண்டி – திகானா வீதியில் பல்லேகெலே பகுதியில் நேற்று (ஏப்ரல் 02, 2026) அதிகாலை இடம்பெற்ற...

Untitled 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாரில் பெரும் அதிரடி: 1,750 கடல் அட்டைகளுடன் 36 சந்தேக நபர்கள் கடற்படையால் கைது!

மன்னார் – இலுப்பைக்கடவை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி (Diving) நடவடிக்கையில்...

Untitled 55
செய்திகள்இந்தியா

பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டார்: கேரளத் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி கடும் தாக்கு!

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கொல்லத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ்...