23 17
இலங்கைசெய்திகள்

கனவு நாட்டை கட்டி எழுப்ப இனப்பிரச்சனை தீரவேண்டும்: அநுரவிடம் கஜேந்திரன் எம்.பி கோரிக்கை

Share

கனவு நாட்டை கட்டி எழுப்ப இனப்பிரச்சனை தீரவேண்டும்: அநுரவிடம் கஜேந்திரன் எம்.பி கோரிக்கை

நீங்கள் கனவு காணும் நாட்டை கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டினுடைய இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (24.09.02024) இடம்பெற்ற திலீபன் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

அநுரகுமாரவும், ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய ஒருவராக இருக்கின்றார். அவர்கள் சோசலிசவாதிகளாக தங்களைக் காட்டிக் கொண்டிருந்தாலும் துரதிஸ்டவசமாக அவர்களது அமைப்பு தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பிற்கு கடந்த காலங்களில் முழுமையாக துணை நின்றது.

ஒன்றரை இலட்சம் அப்பாவி தமிழ் மக்கள் இறுதிப்போரில் மடிவதற்கு இந்த அமைப்பு உதவி புரிந்தது. தற்போது நாட்டின் ஆட்சி அதிகாரத்தினை அவர்கள் பிடித்துள்ளனர். நாங்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வோம் என்று அவர்கள் சொல்வது கேட்பதற்கு இனிமையாக இருக்கலாம்.

நாம் அவரிடம் கேட்பது என்னவென்றால் ஒரு மாற்றத்திற்காக சிங்கள மக்கள் அதிகாரத்தை உங்களுக்கு வழங்கியிருக்கின்றார்கள். நீங்கள் கனவு காண்கின்ற நாட்டை கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டினுடைய இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்.

அது எவ்வாறு தீர்க்கப்படவேண்டும் என்று நீங்கள் முடிவெடுக்க முடியாது. உங்களுக்கு அந்த அருகதை கிடையாது. தமிழர்களின் விருப்பங்களை ஏற்றுக் கொண்டு அந்த விருப்பங்களை அங்கீகரிப்பதன் மூலமாக தமிழர்களை இந்த நாட்டின் ஆட்சியில் பங்காளிகள் ஆக்குவதற்கு துணியவேண்டும்.

அந்த துணிச்சல் உங்களுக்கு இருக்க வேண்டும் என்று புத்தபிரானையும் எமது கடவுளர்களையும் நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தை அங்கீகரித்து எமது தேசம் இறைமை என்ற வகையில் எமது சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்து அதனடிப்படையில் ஒரு சமஸ்டி அரசியலமைப்பினை கொண்டு வருவதனூடாக இந்த நாட்டினுடைய எதிர்காலத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு தமிழர்களின் பங்களிப்பை பெறுவதற்கான அத்திவாரத்தை நீங்கள் இடவேண்டும்.

அதற்குரிய அணுகுமுறைகளையும் நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு நீங்கள் உடனடியாக இறங்கவேண்டும் என்ற கோரிக்கையினை நாங்கள் அவரை நோக்கி முன்வைக்கின்றோம்” எனக் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...