இலங்கைசெய்திகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கஜேந்திரகுமார்.! உண்மையை மறைக்கும் த.தே.ம.மு

Share
5 7 scaled
Share

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கஜேந்திரகுமார்.! உண்மையை மறைக்கும் த.தே.ம.மு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தீவிரமான புற்றுநோய் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் கருத்து வெளியிட கட்சியின் பேச்சாளர் க.சுகாஷ் மறுத்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் ஐ.பி.சி தமிழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்த சுகாஷ், அவர் அவுஸ்திரேலியாவில் சாதாரண மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு மூன்று மாத கால விடுமுறை வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல முன்மொழிந்திருந்தார்.

இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வழிமொழிந்தார்.

இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு 3 மாத கால விடுமுறை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தீவிரமான புற்றுநோய் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதன் காரணமாக அவருக்கு குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நோய்க்கு சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக அவர் வெளிநாடொன்றுக்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமது கட்சித் தலைவரின் நோய் நிலைமை தொடர்பில் வெளிப்படையாக கருத்து தெரிவிக்க கட்சியின் பேச்சாளர் க.சுகாஷ் மறுத்துள்ளார்.

சாதாரண மருத்துவ சிகிச்சைகளுக்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளதாகவும் அடுத்த மாதம் அவர் நாடு திரும்புவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கட்சி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் தொடர்ந்தும் செயல்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...