சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி

tamilni 429

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 2 அல்லது 3 நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றையதினம்(28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

செயன்முறைப் பரீட்சைகளில் ஏற்பட்ட தாமதமே பெறுபேறுகள் தாமதமடைவதற்கும் காரணம்.

இதேவேளை, எதிர்வரும் வருடம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மே அல்லது ஜீன் மாதங்களில் நடைபெறும், சரியான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்பதும் இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிக்கும்.

புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை எம்மால் ஒரு மாதத்திற்குள் வெளியிடக் கூடியதாக இருந்தது.

அதேபோல உயர்தரப் பரீட்சையும் திட்டமிட்டபடி எதிர்வரும் ஜனவரி மாதம் 04ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version