yh 7 scaled
இலங்கைசெய்திகள்

உயர்தரத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு ஜனாதிபதி வழங்கும் வாய்ப்பு

Share

உயர்தரத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு ஜனாதிபதி வழங்கும் வாய்ப்பு

உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் வழங்கும் புலமைப்பரிசில்கள் தொடர்பான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி நாளையுடன்(22ஆம் திகதி) நிறைவடைகிறது.

இதற்கிணங்க பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளை (22) நிறைவு பெறுகிறது.

இம்முறை க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய பணிப்புரைக்கு அமைய, கடந்த வருடமும் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் டிசம்பர் மாதம் 01ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

நாட்டின் நூறு கல்வி வலயங்களையும் உள்ளடக்கும் வகையில், ஒவ்வொரு வலயத்திலிருந்தும் 50 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, 5,000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா புலமைப்பரிசில்கள் வழங்கப்படும்.

2022 (2023) ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு முதல் முறையாகத்தோன்றி, பரீட்சையில் சித்தி பெற்று, உயர்தரம் கற்கத் தகுதிபெற்று, அரச பாடசாலையிலோ அல்லது கட்டணம் அறவிடாத தனியார் பாடசாலையிலோ கல்வி பயிலும், விண்ணப்பதாரரின் குடும்பத்தின் மாத வருமானம் ரூ. 1,00,000 வுக்கு குறைவாக காணப்படுகின்றமை இந்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படைத் தகுதியாகும்.

இந்த புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அது தொடர்பான விபரங்களை ஜனாதிபதி செயலகத்தின் இணையத்தளங்கள்: presidentsoffice.gov.lk

ஜனாதிபதி நிதியம்: presidentsfund.gov.lk

மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு: pmd.gov.lk ஆகியவற்றிற்குச் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களை முறையாகப் பூர்த்தி செய்த பின், குறித்த மாணவர்கள், 2023 டிசம்பர் 22-ஆம் திகதிக்கு முன், தாங்கள் பரீட்சை எழுதிய பாடசலையின் அதிபரிடம் விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும்.

செல்லுபடியாகும் காலம் மீண்டும் நீட்டிக்கப்படாதென எதிர்பார்க்கப்படுவதால், தகுதியுடைய சகல மாணவர்களும் டிசம்பர் 22 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி நிதியம் கேட்டுக்கொள்கிறது.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...