உயர்தர பரீட்சை தொடர்பில் அறிவிப்பு
க.பொ.த உயர்தர பரீட்சை நடைபெறும் காலம் தொடர்பான தகவலை கல்வியமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் நவம்பர் 27 முதல் டிசம்பர் 21 வரை நடைபெற உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமைச்சின் செயலாளரின் அனுமதியின் பின்னர் பரீட்சை அட்டவணை குறித்து அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
Leave a comment