தமிழ் ஆசிரியர் உயிர் மாய்ப்பு
இலங்கைசெய்திகள்

பிரமிட் நிதி மோசடி! தமிழ் ஆசிரியர் உயிர் மாய்ப்பு!

Share

தமிழ் ஆசிரியர் உயிர் மாய்ப்பு!

ஹம்பாந்தேட்டையில் விளையாட்டு ஆசிரியர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டமை அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

38 வயதான ஸ்ரீநாத் தர்ஷன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரை மாய்த்துள்ளார்.

கரஸ்முல்ல பிரதேசத்திலுள்ள பாடசாலையின் விளையாட்டு அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இணையத்தில் இயங்கும் பிரமிட் திட்டத்தில் சிக்கி பணத்தை இழந்த ஆசியரே இந்த நிலைமைக்குள்ளாகியுள்ளார்.

இவர் வரஸ்முல்ல பலலேகந்த வடக்கு, கனுமுல்தெனிய கல்லூரியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவரைத் தேடியபோது, ​​விளையாட்டு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலத்தை அதிபர் கண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அதிபர் கரஸ்முல்லை பொலிஸாருக்கு அறிவித்ததன் பேரில் பொலிஸார் சென்று சடலத்தை அகற்றியுள்ளனர்.

இந்த ஆசிரியர் இறப்பதற்கு முன்னர் உயிரை மாய்க்கப் போவதாக சிவப்பு பேனாவால் எழுதிய கடிதம் கிடைத்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கவர்ச்சிகரமான வட்டிக்காக சட்டவிரோத பிரமிட் திட்டத்தில் பெருமளவு பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும், பணம் கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தியில் அவர் உயிரை மாய்த்திருக்கலாம் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் பிரமிட் திட்டத்தில் அதிக பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும் பலன் கிடைக்காவிட்டால் உயிரை மாய்க்கவுள்ளதாகவும் ஒரு மாதத்திற்கு முன்பு நண்பரிடம் கூறியதாகவும் தெரிய வருகிறது.

அவர் பிரமிட் திட்டத்தில் பணம் முதலீடு செய்திருப்பது அவரது மனைவி அல்லது உறவினர்களுக்கு தெரியாது. இது தொடர்பான தகவல்களை கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கரஸ்முல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பலர் இந்த சட்டவிரோத பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பணத்தை முதலீடு செய்த பலர் பணத்தை இழந்துள்ளதாகவும், இது தொடர்பாக பொலிஸாருக்கும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்காலை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்னவின் ஆலோசனையின் பேரில் கரஸ்முல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...