இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளது என வெளியான செய்திகளை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நிராகரித்துள்ளார்.
இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவொன்றையும் பதிவிட்டுள்ளார்.
அதில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு என வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கவுள்ளது எனவும், இது தொடர்பில் இறுதி முடிவை எடுப்பதற்காக இன்றிரவு 8 மணிக்கு பதில் நிதி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தலைமையில் முக்கிய கூட்டமொன்று நடைபெறவுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment