tamilnaadi 72 scaled
இலங்கைசெய்திகள்

எரிபொருள், மின்சார கட்டணங்கள் குறைப்பு : கோபத்தில் மக்கள்

Share

எரிபொருள் விலை குறைப்பது என்பது ஏமாற்று செயற்பாடு என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

நேற்று நள்ளிரவு முதல், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாவினாலும், லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் 92 ஒக்டேன் பெற்றோல் விலை திருத்தப்படவில்லை. தேவையான எரிபொருளின் விலை தாம் உணரும் சதவீதத்தினால் குறைக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை, மின் கட்டண குறைப்பின் நன்மை மக்களுக்கு வழங்கப்படும் என அகில இலங்கை உணவக மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார்.

ஆனால், மின்கட்டணத்தை உயர்த்திய சில சங்கங்கள் கட்டணம் குறைக்கப்படும்போது மௌனமாகவே இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

மின்கட்டணம் மிக அதிக சதவீதம் குறைக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், பேக்கரி உரிமையாளர்களும் தங்களது பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என தேசிய நுகர்வோர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் கே. பி. ஹேரத் தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்ட போதிலும் தமது சேவைகளின் விலையை விரைவாக குறைக்க முடியாது என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...