இலங்கைசெய்திகள்

புதிய நிறுவனம் ஆரம்பித்து 24 மணிநேரத்திற்குள் அதிகரித்த எரிபொருளின் விலை!

rtjy 19 scaled
Share

புதிய நிறுவனம் ஆரம்பித்து 24 மணிநேரத்திற்குள் அதிகரித்த எரிபொருளின் விலை!

புதிய நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனுவெவ தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பல்வேறு நாடுகளில் இருந்து வருகைத் தந்து எமது மக்களுக்கு நிவாரண ரீதியில் எரிபொருள் விநியோகிப்பதாக ஆரம்பத்தில் கூறியிருந்தனர்.

நிவாரணம் வழங்குவதாக கூறி எரிபொருள் நிறுவனத்தை ஆரம்பித்தனர். ஆரம்பித்த 24 மணி நேரத்திற்குள் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களை அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதனை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேநேரம் நிறுவனங்களுடன் இரகசிய டீல் வைத்த பின்னர் அவர்கள் இங்கு தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். தேவையான அளவில் விலையை அதிகரித்து தருகின்றோம். நீங்கள் விரும்பிய விலைக்கு விற்பனை செய்து அதில் எமக்கு பாதியை வழங்குங்கள் என்றே அவர்கள் கூறியுள்ளனர்.

அந்த சூட்சுமத்தை 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் புரிந்து கொண்டுள்ளோம். நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். இது ஊழல் மிகு டீல் ஆகும்.

பல்வேறு நிறுவனங்களின் பெயர்கள் இருந்தாலும் சில நிறுவனங்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் நண்பர்களின் மற்றும் உறவினர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவர்களுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கின்றது. இவை அனைத்தும் கறுப்பு பணம். மக்களுக்கு என்ன நடந்தாலும் அவர்கள் கவலையடைவதில்லை. அவர்களுக்கு பணம் கிடைத்தால் போதும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...