மேலும் உயரும் எரிபொருளின் விலை! ஐஓசி – சினோபெக்கின் தீர்மானம்

Murder 3

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபத்தின் விலைத் திருத்தத்திற்கு சமமாக தங்களது எரிபொருட்களின் விலையையும் திருத்துவதற்கு சினோபெக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையில் மாற்றம் செய்திருந்தது.

இதன்படி, ஐஓசி எரிபொருள் நிறுவனமும் தங்களது விலைகளில் திருத்தம் செய்திருந்த நிலையில் சினோபெக் நிறுவனமும் விலைகளில் திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைய, வெள்ளை டீசல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, வெள்ளை டீசல் ஒரு லீட்டரின் விலை 274 ரூபாவிலிருந்து 289 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

மண்ணெண்ணை லீட்டர் ஒன்றின் விலை 7 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, மண்ணெண்ணெய் ஒரு லீட்டர் விலை 178 ரூபாவிலிருந்து 185 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

92 ஒக்டேன் ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 293 ரூபாவிலிருந்து 305 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, 4 ஸ்டார் யூரோ 4 ரக லங்கா சுப்பர் டீசல் மற்றும் 95 ஒக்டேன் யூரோ 4 ரக பெட்ரோல் என்பனவற்றின் விலைகளில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலைகளுக்கு சமமாக ஐஓசி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களின் எரிபொருள் விலைகளும் மாற்றமடைந்துள்ளன.

Exit mobile version