கடவத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
பெற்ரோலை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்ற ஒருவரே இவ்வாறு மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ராகம வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாகொல பகுதியை சேர்ந்த 70 வயதான ஒருவரே எரிபொருள் வருசையில் நின்று மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
எரிபொருள் வரிசையில் காந்திருந்து, மயங்கி வீழ்ந்து உயிரிழந்த இரண்டாவது நபர் இவராவார்.
நேற்றைய தினம் கண்டியில் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்ள வரிசையில் நின்ற ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNEws