எரிபொருள் பிரச்சினை – பொலிஸ் நிலையங்களுக்கு பறந்த கடிதம்!!

letter of recommendation 2400x2400 20201211

 

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் வரிசையில் நிற்பதால் கலவரம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

விவசாய நடவடிக்கைகளுக்கு தடையின்றி எரிபொருளை கொண்டுசெல்லும் நபர்களுக்கு முன்னுரிமை வழங்கவும்.

சுற்றுலா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அம்புலன்ஸ்களுக்கு எரிபொருள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் விசேட சுற்று நிருபமொன்றை வெளியிட்டுள்ளார்.

எரிபொருள் பெற வரிசையில் நிற்கும் போது, ​​நெரிசல் முடியும் வரை பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

 

 

Exit mobile version