எரிபொருட்களின் கையிருப்பு தொடர்பில் பிரதமர் அறிவிப்பு

tamilni 20

எரிபொருட்களின் கையிருப்பு தொடர்பில் பிரதமர் அறிவிப்பு

உலக சந்தையில் எரிபொருட்களின் விலை உயர் மட்டத்தில் இருந்த போதிலும் அரசாங்கம் மிகக் குறைந்த அளவிலேயே எரிபொருள் விலையை உயர்த்தியதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் எரிபொருள் இருப்புக்களை முகாமை செய்வது மிகவும் முக்கியமானது என கூறியுள்ளார்.

மேலும் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக எரிபொருள் கையிருப்பை முகாமை செய்யுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Exit mobile version