2 7
இலங்கைசெய்திகள்

மீண்டும் எரிபொருள் வரிசை: நாட்டு மக்களுக்கு அரசு விடுத்துள்ள வேண்டுகோள்

Share

புதிய இணைப்பு
எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அரசு பொதுமக்களுக்கு வேண்டுகொள் விடுத்துள்ளது.

குறித்த விடயத்தை எரிசக்தி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளை அவதானித்துள்ளதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாகவும், முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்ட எரிபொருள் இருப்புகளைப் பெற தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே, பொதுமக்கள் போலிச் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என எரிசக்தி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

முதலாம் இணைப்பு
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் அதனால் ஏற்படும் நிலைமைக்கு அச்சமாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

யாழ் நகரம் மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் உள்ள பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தனியார் நிரப்பு நிலையங்களில், எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் அதிகளவில் கூடிவருவதால், அந்தந்த நிலையங்களில் நீண்ட வரிசைகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக, மத்திய கிழக்கில் தொடரும் நிலவரம், உலகளாவிய எரிபொருள் விநியோகத்தையே பாதிக்கக்கூடியதாக இருப்பதால், மக்கள் முன்னேற்பாடாக எரிபொருள் சேமிப்பதற்குத் துணைகொள்கிறார்கள்.

இது தொடர்பாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் கூறுகையில், “வடக்கு மாகாணத்தில் தேவையான அளவில் எரிபொருள் இருப்பு உள்ளது. நிரப்பு நிலையங்கள் வழக்கம்போல் இயங்குகின்றன.

செயற்கையாக தட்டுப்பாடு உருவாகும்படியாகச் செயல்பட வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...