Sequence 02.00 00 21 02.Still021 scaled
இலங்கைசெய்திகள்

எரிபொருட்களுக்கு மீண்டும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை

Share

எரிபொருட்களுக்கு மீண்டும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை

ஜனாதிபதி தேர்தலில் தேசிய தலைவராகவே ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார். மக்கள் அவருக்கு ஆதரவளிக்காவிட்டால் எரிபொருட்களுக்கு மீண்டும் வரிசையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டே ஆகும் என ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலே இடம்பெறும். அதன் பிரகாரம் இந்த வருடம் ஒக்டோபர், செப்டம்பர் மாதத்துக்குள் தேர்தல் இடம்பெறும்.

எரிபொருட்களுக்கு மீண்டும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை: அமைச்சர் எச்சரிக்கை | Fuel Crisis In Sri Lanka

வெளிநாடுகளின் தேவைகளுக்காகவே சில குழுக்கள் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.இவர்கள் தொடர்பாக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நாட்டை 2048வரை கொண்டுசெல்ல தேசிய கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னெடுத்துச்செல்ல ஆதரவளிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாடு வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாமல் போகும்.

நாட்டை முன்னெடுத்துச்செல்ல முடியுமான வழிகாட்டலை ரணில் விக்ரமசிங்க தயாரித்துள்ளார். இந்த வழியை தவிர வேறு வழி இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே நாட்டில் அடுத்து இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடிப் பரந்துபட்ட கூட்டணியை அமைக்க இருக்கிறோம். அதில் ரணில் விக்ரமசிங்க தேசிய தலைவராக தேர்தலில் போட்டியிட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தேசிய தலைவருக்கு மக்கள் ஆதரவளிக்காவிட்டால் எரிபொருளுக்காக மக்கள் மீண்டும் வரிசையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டே ஆகும். அந்த பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

நாட்டின் தற்போதைய நிலைமையில் அனைவரும் ஒரு தேசமாக ஒன்று திரளவேண்டும்.

இந்த விடயத்தில் நாங்கள் இந்தியாவை முன்மாதிரியாகக்கொள்ள வேண்டும். அவர்கள் அரசியல் ரீதியில் பிளவுபட்டிருந்தாலும் தேசம் என்று வரும்போது ஒரு கொள்கையில் பிளவுபடாமல் இருக்கின்றனர்.

மேலும் அன்று டொலரின் பெறுமதி அதிகரிக்கும்போது பொருட்களின் விலையும் அதிகரித்துக்கொணடே சென்றது. அப்பாேது ஊடகங்களும் பாரியளவில் பிரசாரம் வழங்கி வந்தன. ஆனால் தற்போது டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து பொருட்களின் விலையும் குறைவடைந்து வருகிறது. ஆனால் அது தொடர்பில் ஊடகங்களின் பிரசாரம் குறிப்பிடத்தக்களவில் இல்லை.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நாடு பொருளாதார ரீதியில் இருந்த நிலையை தற்போதுள்ள நிலையுடன் ஒப்பிட்டு பார்த்தால், எந்தளவு முன்னேற்றம் அடைந்திருப்பதை எங்களுக்கு உணர்ந்துகொள்ள முடியும்.”என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...