தென்னிலங்கையை உலுக்கிய இரட்டை படுகொலை – பின்னணி தொடர்பில் வெளியான பகீர் தகவல்

19 3

தென்னிலங்கையில் இளம் தம்பதியை கொடூரமாக கொலை செய்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹுங்கம, வாடிகல பகுதியிலுள்ள வீடொன்றில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக பிரதான சந்தேக நபர் உட்பட ஐந்து பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதுபெலேன பிந்து என அழைக்கப்படும் பிரதான சந்தேக நபரும், மேலும் நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளில், போதைப்பொருள் தொடர்பான தகராறு மற்றும் திருமணத்திற்கு புறம்பான உறவு ஆகியவையே இந்தக் கொலைகளுக்கு முக்கியக் காரணங்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்தக் கொலை சம்பவம் நேற்று அதிகாலை முகமூடி அணிந்த குழுவால் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 28 வயதான இமேஷா மதுபாஷினி மற்றும் அவருடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்த போபசிந்து என அழைக்கப்படும் 28 வயதான பசிந்து ஹேஷன் என்பவர்களாகும்.

இருவரும் ரன்ன மற்றும் திஸ்ஸமஹாராம பகுதிகளில் வசிப்பவர்களாகும். ஹுங்கம வாடிகல பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த போது கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கூர்மையான ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்தனர். மேலும் சம்பவத்தின் போது வீட்டின் உரிமையாளரும் அங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது.

முக்கிய பிரான சந்தேக நபரான அதுபெலேன பிந்து மற்றும் கொலை செய்யப்பட்ட பசிந்து ஆகியோர் சிறிது காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பசிந்து ஏற்கனவே கொலை மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த ஆண்டு அவர் பணிபுரிந்த மீன்பிடி படகின் உரிமையாளரை கொன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஹுங்காம பொலிஸார் மற்றும் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு இணைந்து இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றன.

Exit mobile version