tamilni 163 scaled
இலங்கைசெய்திகள்

தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த சிறுமி திடீரென உயிரிழப்பு

Share

தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த சிறுமி திடீரென உயிரிழப்பு

ஹொரணை – திகேனபுர பகுதியில் உறங்கிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுமியொருவர் நேற்று பிற்பகல் திடீரென உயிரிழந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹொரணை, திகேனபுர பகுதியில் வசித்து வந்த சசுகி அனன்யா செசாந்தி என்ற நான்கு வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி வழமை போன்று தனது தாயுடன் உறங்கிய நிலையில்,சிறுநீர் கழித்தமையினால் உடைகளை மாற்றத்தயாரானபோது, சிறுமியின் உடல் உயிரற்ற நிலையில் இருப்பதை உணர்ந்து தனது கணவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமியின் பிரேத பரிசோதனை இன்று (12.09.2023) ஹொரணை ஆதார வைத்தியசாலையில் மரண விசாரணை நீதிபதி சுசுமேதா குணவர்தன முன்னிலையில் நடைபெறவுள்ளது.

மேலும், ஹொரணை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பதில் கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் பராக்கிரம குணரத்னவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...