இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் 4 வயதுச் சிறுவனுக்கு எமனான சவர்க்காரம்

8 6
Share

யாழ்ப்பாணத்தில் 4 வயதுச் சிறுவனுக்கு எமனான சவர்க்காரம்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) சவர்க்காரத்தில் கால் வழுக்கியதில் சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான்.

இருபாலை கிழக்கு, இருபாலை பகுதியைச் சேர்ந்த நிரோசன் விமாத் (வயது 04) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 23ஆம் திகதி குறித்த சிறுவன் அயல்வீட்டு சிறுவனுடன் விளையாடி விட்டு வாளியைக் கொண்டு கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கை கழுவியுள்ளான்.

இதன்போது சவர்க்காரம் கீழே விழுந்த நிலையில் சவர்க்காரத்தின் மீது கால் மிதிபட்டதில் வழுக்கி கிணற்றினுள் விழுந்துள்ளான்.

இந்நிலையில், குறித்த சிறுவனை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ( Jaffna Teaching Hospital) சேர்ப்பித்தனர். இருப்பினும் குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளான்.

அவனது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...