இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் யாழ். மற்றும் கிளிநொச்சியில் கைது!

articles2FFRfdZpigOe1FxwuUE5O6

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் யாழ், கிளிநொச்சியில் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்தில் வைத்துச் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் இதுவரையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி போலீஸ் அத்தியாச்சகர் (ASP) ஊட்லர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நேபாளத்தில் வைத்து இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டு, பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

கொலைக் சம்பவம் இடம்பெற்ற பின்னர் இஷாரா செவ்வந்தி தங்கியிருந்த இடங்களுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த விசாரணைகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த நால்வர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Exit mobile version